கனிமொழி விருப்ப மனு

தூத்துக்குடி மார்ச் 6: மக்களவைத்தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி விருப்ப மனு அளித்தார்.
ஏற்கெனவே அவருக்காக அமைச்சர்கள் கீதாஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை அளித்திருந்தனர்.
இந்த சூழலில், நேற்று அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய கனிமொழி, அறிவாலயத்தில் நேற்று மதியம் விருப்ப மனுவை தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோரிடம் வழங்கினார்.