கன்னட சினிமா ஜோடி திருமணம்

பெங்களூரு, ஜன.10- கன்னட திரையுலக கலைஞர்கள் நடிகை ஹரிப்ரியாவும், நடிகர் வசிஷ்தாசின்ஹாவும் வரும் 26ம் தேதி புது வாழ்க்கையை தொடங்குகின்றனர்.
மைசூரில் உள்ள இரு குடும்பத்தினரின் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், இந்த ஜோடி சச்சிதானந்தா ஆசிரமத்தில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று புதிய வாழ்க்கையை தொடங்குகின்றனர்.
மைசூரில் திருமணத்திற்குப் பிறகு பெங்களூரில் திரையுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது
பல வருடங்களாக வித்தியாசமான வேடங்களில் நடித்து கன்னட ரசிகர்களை மகிழ்வித்த இந்த ஜோடி காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளனர்
கன்னட தெலுங்கு சினிமாவில், ஹரிப்ரியா மற்றும் வசிஷ்ட சிம்ஹா ஹீரோ மற்றும் ஹீரோயின்களாக தோன்றினர்
இந்த நட்சத்திர ஜோடி இப்போது திருமணம் செய்து கொள்கிறது.அதற்கான ஏற்பாடுகள் மைசூர் மற்றும் பெங்களூருவில் செய்யப்பட்டு வருகிறது
டிசம்பர் மாதம் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தனர்.