கன்னட சினிமா மூத்த நடிகர் மறைவு

பெங்களூர்: நவம்பர். 8 – வயது முதிர்ச்சியால் உடல்நலம் பாதிப்புக்கு ஆளாகியிருந்த கன்னட திரையுலகின் மூத்த நடிகர் லோஹிதாஷ்வா மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் லோஹிதாஷ்வா இன்று பிற்பகல் மரணமடைந்துள்ளார். அவருக்கு 80 வயதாகியிருந்தது. இவருடைய மரணத்தால் கன்னட திரையுலகம் ஒரு உன்னத நடிகரை இழந்து அனாதை ஆகியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக குமாரசாமி லே அவுட்டில் உள்ள சாகர் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. லோஹிதாஷ்வா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டிருந்துள்ளார் . இவரை காப்பாற்ற மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர் . கடந்த மாதம் ஒன்பதாம் தேதியன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட உடனேயே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்க பட்டு வந்திருப்பினும் தற்போது சிகிச்சை பலனின்றி லோஹிதாஷ்வா இன்று பிற்பகல் மரணமடைந்துள்ளார்.