கன்னட நீதி கதைகள் தொகுப்பு வெளியிட்ட கவர்னர்

பெங்களூர் : செப்டம்பர். 16 – மாநில பள்ளிக்கல்வி துறை மற்றும் பெங்களூரின் பி இ எஸ் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கு கன்னட நீதி கதைகளின் தொகுப்பு ‘கதா லோகா’ என்ற புத்தகத்தை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தாவர் சந்த் கெலோட் இன்று வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் நாம் நம் வீட்டை கட்டும்போது அந்த வீடு நீண்டகாலம் நிலைக்க அதன் அஸ்திவாரங்களை பலப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் நல்ல தரமான பொருட்களை பயன் படுத்தி வீடுகளை கட்டுகிறோம். இதே மனநிலையை நாம் நம் குழந்தைகள் விஷயத்திலும் கவனம் செலுத்தவேண்டும். பால்ய வயது என்பது குழந்தைகளின் வாழ்க்கைக்கான அஸ்திவாரமாகும். இந்த வகையில் நம் குழந்தைகளின் அஸ்திவாரங்களை கெட்டியாக அமைக்க வேண்டியது நம் பொறுப்பாகும். இந்த அடிப்படை அஸ்திவாரத்தின் மீதே குழந்தைகளின் எதிர்கால வாழக்கை நின்றாக வேண்டியுள்ளது . ஒழுக்க கதைகள் குழந்தைகளின் வாழ்க்கையில் தொடர் உறவுகளை கொள்ளுவன . குழந்தைகளின் எண்ணங்களை பலப்படுத்துவதில் காலாச்சார மற்றும் உணர்வுபூர்வமான வளர்ச்சிகளை அபிவிருத்தி படுத்துவதில் இத்தகைய நீதி கதைகள் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. தவிர நீதிக்கதைகள் குழந்தைகளுக்கு நல்ல அறிவை அளிக்கும் ஒரு முறையாக உள்ளது. ஒரு மனிதனை உருவாக்குவது மற்றும் சமுதாயத்துக்கு உயர் மட்டத்தில் கல்வி அறிவு தரவேண்டியது மிகவும் முக்கியமானது . முழு சமுதாயம் மற்றும் நாட்டில் நேர்மையை ஊட்டும் மற்றும் அடிப்படை முக்கிய அறிவை அதற்கேற்ற மதிப்புகளுடன் கோர்த்து தர்மம் , கலாச்சாரம் , தேசிய ஒற்றுமை , சமத்துவத்தை காப்பாற்றுவது மற்றும் சமூகத்தில் ஒற்றுமையை பின்பற்றுவதற்கான கல்விக்கு அவசியம் உள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கைகள் , நம் இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பாக அமையும். புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்த புதிய கல்வி முறைகள் மிகவும் முக்கிய பாத்திரத்தை வகிக்கும். எனவே இந்த புதிய கல்வி கொள்கைகள் மற்றும் நியமங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு நம் அனைவர் மீதும் உள்ளது . இவ்வாறு ஆளுநர் தன் உரையில் தெரிவித்தார்