கன்னட பெயர் பலகை கட்டாய நடவடிக்கை வேண்டாம்: எப்கேசிசிஐ வேண்டுகோள்

பெங்களூரு, பிப். 22- வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளில் 60 சதம் கன்னடத்தை அமல்படுத்துவதற்கான பிப். 28 ஆம் தேதி காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், காலக்கெடு முடியும் வரை கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பிபிஎம்பி மற்றும் மாநில அரசுக்கு எப்கேசிசிஐ, வணிகர்கள், வேண்டுகோள் விடுத்துள்ளனர். பல வர்த்தகர்கள் தற்போது பெயர் பலகைகளை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதால்,
கன்னட ஆதரவு குழுக்கள் தங்களுக்கு எதிராக துன்புறுத்தலோ அல்லது நாசவேலையில் ஈடுபடவோ கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்பு திய பெயர் பலகைகளை நிறுவுவதில் வர்த்தகர்கள் ஆர்வமாக உள்ளதாகவும், விதிகளை கடைபிடிப்பதாகவும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FKCCI) தெரிவித்துள்ளது. கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்புI ஒரு அறிக்கையில், “மேற்கண்ட விதிக்கு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சியைக் (பிபிஎம்பி) கேட்டுக்கொள்கிறோம். மேலும் யாரும் எடுக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அரசை வலியுறுத்துகிறோம்.
வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை துன்புறுத்துவதற்கு சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது.குறிப்பாக சிறு வியாபாரிகளுக்கு பெயர் பலகைகளை மாற்றுவது நிதிச்சுமையாக உள்ளது என கர்நாடக உள்ளாடை மற்றும் ஆடை சங்க செயலாளர் கைலாஷ் பலார் தெரிவித்தார். செலவு 30,000 வரை செல்கிறது. அதனால் சிலர் மெதுவாக செய்கிறார்கள்.
அவர்கள் சட்டத்திற்கு கட்டுப்படுவார்கள். அதுபோன்றவர்களுக்கு பிப்ரவரி 28 வரை அவகாசம் கொடுக்க வேண்டும் என்றார். கடந்த வாரம் ஜெயநகரில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் மற்றும் பிரிகேட் சாலையில் உள்ள பல கடைகளை பிபிஎம்பி கடந்த வாரம் மூடியதைத் தொடர்ந்து வணிகர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.