கன்னட மொழியை காக்க பெண்கள் மோட்டார் சைக்கிள் பேரணி

பெங்களூர், நவ. 20-
‘கன்னடத்தை காப்போம்’ ‘கன்னடத்தை வளர்ப்போம்’ என்ற முழக்கத்துடன், 120 பெண்கள், மஞ்சள் சிகப்பு ஆடைகள் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்கி, பசவனகுடி முதல் விதானசா வரை ‘பைக் ஊர்வலம்’ நடத்தினர்.
கன்னட மொழி வளர்ச்சிக்காக வண்ணமயமான பெண்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் தங்களது பெற்றோர், பிள்ளைகளுடன் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர். அவர்களின் மொழியுடன் வை வெளிபடுத்தினர்.சர்வதேச ஆர்ய வைஷ்ய பெண்கள் அமைப்பின் பசவனகுடி பிரிவின் லட்சுமி ஸ்ரீநாத் என்பவர் கம்யூனிட்டி கேர் இயக்குனராகவும் இருந்து வருகிறார். இவர் இது குறித்து கூறுகையில், ஏராளமானோர் கன்னடம் அறிந்தவர்களாக, பேசுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் அண்மை காலமாக அது குறைந்து வருகிறது.
குழந்தைகள் பேசும்போது கன்னடத்தில் பதிலை கொடுக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு கன்னட மொழி தெரிவதில்லை. எனவே நாம் பேசும் மொழியில் குழந்தைகள் கன்னடத்தை தெரிந்துக்கொள்ளலாம். எனவே, நாம் இதன் பேரில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பெண்களின்
பைக் ஊர்வலம் நடத்துவதன் நோக்கமே, கன்னடத்தை பாதுகாக்க, வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த தான். எனவே கன்னட கொடியுடன் பெண்கள் கன்னட முழக்கத்துடன் ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர்
சுஷ்மா காசி (38). என்பவர் முன்பு பசவனகுடியில் வசித்து வந்தவர். இவரும் கன்னட உணர்வுடன் அதன் பாரம்பரிய வேட்டி சேலை அணிந்து, தனது 6 வயது விவேக் என்ற மகனுடன் கன்னட பெருமையைப் விளக்கும் அட்டையுடன் பங்கேற்றார்.
பத்மாவதி, (62). என்பவர் இவரின் மகள் ஸ்வேதாவின் ஸ்கூட்டி யில் பங்கேற்றார். அவர் கூறுகையில், நான் படிக்கும் காலத்தில் கன்னட பாடல்களை பாடியிருக்கிறேன். கன்னடத்தில் பெருமைகள் தற்போதுள்ள தலைமுறையினரிடம் காண்பது அரிதாகி உள்ளது. என்னால் முடிந்த அளவு கன்னட மொழி வளர்ச்சிக்காக செய்வேன்
என்றார்.