கன ரக வாகனங்களுக்கு பகலில் மட்டுமே திறக்கப்படவுள்ள பீன்யா மேம்பாலம்

பெங்களூர் : ஏப். 3 – தகவல்கள் தெரிவிக்கும்படி தும்கூர் வீதியில் உள்ள பீன்யா மேம்பாலம் விரைவில் கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் ஆனால் வெறும் பகலில் மட்டுமே அனுமதிக்கப்படும் தவிர இரவுகளில் அனுமதி இல்லை. இந்திய விஞ்ஞான கல்லூரியின் பேராசிரியர் சந்திர கிஷன் இது குறித்து கூறுகையில் தற்போது மேம்பாலத்தின் கீழ் நடந்து வரும் சிமெண்ட் பணிகளுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக தற்போதைக்கு இரவில் இந்த மேம்பாலத்தில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மேம்பாலத்தின் தரம் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நான்கு பேர் கொண்ட நிபுணர்கள் குழுவிற்கு கிஷன் தலைமை தாங்கி வருகிறார். இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரை indha மேம்பாலத்தில் கனரக வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என இந்த குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை . தற்போது மேம்பாலத்தில் லகு வாகங்களுக்கும் இரவு நேரங்களில் மேம்பாலத்தில் அனுமதி இல்லை. இதே முறை தொடர வேண்டும் என நிபுணர்கள் குழு விரும்புகிறது. இது குறித்து தேசிய நெடுஞசாலை குழுமம் மற்றும் நகர போக்குவரத்து போலீசார் இருவரும் சேர்ந்து ஆலோசனை செய்து முடிவுகள் எடுப்பர். indha மேம்பாலம் 15 அடி அகலம் மற்றும் 4.2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த மேம்பாலத்தில் கடந்த 2021 டிசம்பர் மாதத்திலிருந்து பஸ்கள் மற்றும் இதர கன ரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை . அதிக சுமையால் மேம்பாலம் சற்றே சேதமடைந்தது. indha மேம்பாலம் மூடப்பட்டதால் மேம்பாலத்தின் கீழே உள்ள சாலைகளில் தெப்போது மிகவும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுவருகிறது. 38.5 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞசாலை துறை கடந்த ஆண்டு மேம்பாலம் seer படுத்தும் பணியை துவங்கியது. கடந்த ஜனவரியில் தேசிய நெடுஞசாலை துறை இந்த மேம்பாலத்தில் அனைத்து வாகங்களுக்கும்தடை i விதித்து பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டது. அப்போது நடத்தப்பட்ட சோதனைகளில் மேம்பாலத்தின் தரம் உறுதி செய்யப்பட்டது மார்ச் மாதம் மேம்பாலத்தில் உள்ள 1243 அழுத்தப்பட்ட கேபிள்களை மாற்றியது. இதனால் எதிர்காலத்தில் எவ்வித சுமையையும் மேம்பாலம் தாங்கும் சக்தி கொண்டுள்ளது. தவிர புதிதாக சிமெண்ட் வேயும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து 1243 கேபிள்களை மாற்றி புதுப்பிக்க குறைந்தது ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வருடம் பிடிக்கும். இப்பது இந்த நிபுணர்கள் குழு பீன்யா மேம்பாலம் தொழில் ரீதியில் மிகவும் தரமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. தவிர கேபிள்கள் மீது போக்குவரத்து எஸ் ஓ எஸ் போட இருப்பதால் அதற்க்கு தேசிய நெடுஞசாலைத்துறை காத்திருக்கிறது .