கப்திலை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி

துபாய், செப். 9- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், விராட் கோலி அதிரடியாக ஆடி சதமடித்தார்.
அவர் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த கப்திலை பின்னுக்குத் தள்ளினார். விராட் கோலி இதுவரை 96 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம், 32 அரைசதம் உள்பட 3,584 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் ரோகித் சர்மா (3,620), மூன்றாவது இடத்தில் கப்தில் (3,497) ஆகியோர் உள்ளனர்.