கப்பல்களை தாக்கும் அமெரிக்காவுக்கு ஐ.நா., கண்டனம்

ஜெனிவா, நவ. 1- தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, கொலம்பியாவில் இருந்து கடல் மார்க்கமாக அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். போதை ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி கரீபியன், பசிபிக் கடற்பகுதிகளில் செல்லும் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் நடக்கும் தாக்குதல்களில், 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம் க ண்டனம் தெரிவித்து உ ள்ளது.