கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, நவம்பர். 7 – உலக நாயகன் கமல்ஹாசன் இன்று 68-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தள்ளார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.