கரக ஊர்வலத்தில் நடனமாடுவதில்தகராறு: இளைஞர் கொலை

பெங்களூரு, ஏப். 25: நகரின் வரலாற்று சிறப்புமிக்க கரகா ஊர்வலத்தின் போது இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.கரக ஊர்வலத்தின் போது இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் வி.வி.கிரி காலனியைச் சேர்ந்த டி.சாரதி படுகொலை செய்யப்பட்டார்.அன்னம்மா கோவில் முன்பு நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஊர்வலத்தில் நடனமாடிக்கொண்டிருந்த சாரதி, அருகில் இருந்தவர்கள் உரசியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் சாரதி உள்ளிட்ட சில இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர்.தாக்குதலில் பலத்த காயமடைந்த சாரதி உடனடியாக மல்லேஸ்வரம் கே.சி.பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி சாரதி இறந்ததாக டிசிபி கிரீஷ் கூறினார். இது குறித்து உப்பாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.