பெலகாவி : அக்டோபர் . 9 – தன்னுடைய நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் திடீரென கரடி நிலத்தில் நுழைந்து தாக்கியதில் அதே இடத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் காணாபுராவில் நடந்துள்ளது . காணாபுரா தாலூகாவின் கோஷே புத்ரகா என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி பீகாசி மிராஷி (63) என்பவர் கரடி தாக்கியதில் உயிரிழந்தவர். இவர் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது இவரை கரடி தாக்கியுள்ளது. கரடியால் இவர் தாக்குதலுக்குள்ளான உடனேயே இவரை இழுத்து கொண்டு சென்றுள்ள கரடி இவருடைய உடலை தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் விட்டு சென்றுள்ளது. நிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் பீகாசி மிராஷியின் உடல் கிடைத்துள்ளது . நிலத்தில் அவருடன் வேறு சிலரும் பணியாற்றிவந்துள்ளனர் . ஆனால் எவரை பற்றியும் பயம் இன்றி கரடி இவரை மட்டும் தாக்கியுள்ளது. தாக்கியபின்னர் அவருடைய உடலை தூக்கிக்கொண்டு காட்டுப்பகுதிவரை சென்று வீசி எரிந்து விட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து கானபுரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதே போல் சிக்கமகளூர் மாவட்டத்தின் கனதி கிராமத்தில் அதிகாலையிலேயே யானைகள் நுழைந்துள்ளன . காட்டு வழிவாயிலாக கிராமத்திற்குள் நுழைந்துள்ள யானை கும்பல் சாலையை கடந்து கண்ணுக்கு கிடைத்த நிலங்களில் எல்லாம் நுழைந்து பயிரகளை நாசப்படுத்தியுள்ளது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறேழு காட்டு யானைகள் வீதிகளில் திரிந்து கொண்டுள்ளன. இது சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் கிராமத்தினருக்கிடையே பீதியை கிளப்பியுள்ளது. நேற்று நள்ளிரவு முதலே கிராமத்திற்குள் நுழைந்துள்ள காட்டு யானைகள் அதிகாளிமுதல் நிலங்களில் மற்றும் தோட்டங்களில் நுழைந்து விளை பயிரகளை நாசப்படுத்தியுள்ளன. .இந்த சம்பவங்கள் குறித்து கிராமத்தார் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரியும் கிராமத்திற்கு வராதது மக்களின் கோவத்திற்கு காரணமாகியுள்ளது. இந்த காட்டு யானைகளால் மேலும் அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.