கருகிய இலைகளுக்கு தீ வைப்பு பெங்களூரில் காற்று மாசு

பெங்களூர், பிப். 27-
பெருநகர் பெங்களூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல
இடங்களில் கோடை காலங்களில் இலைகள் உதிர்ந்து சாலைகளில் குவிவது வழக்கம். இதனை அகற்றாமல் தீ வைத்து எரித்து சாம்பலாக்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் நகரில் பல இடங்களில் காற்று மாசு ஏற்பட்டு சுவாசக் கோளாறு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
கோடை காலம் தொடங்கிவிட்டது. உதிர்ந்த இலைகளை எரிக்கப்படும் சம்பவங்களும் வழக்கம் போல நடந்தவாறு உள்ளது.
செடி, கொடி மரங்களில் உதிர்ந்து கிடக்கும் இலைகளை வாரி எடுத்துச் செல்ல மாநகராட்சி ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
பல இடங்களில் குப்பைகளை எரித்து மாசு ஏற்படுத்துவதாகவும் தெரிய வருகிறது. சில நேரங்களில் துப்புரவு தொழிலாளர்களே அதிக உதிர்ந்த இலைகளை எரித்து வருவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.
பானஸ்வாடி பகுதியில் அதிக அளவு உதிர்ந்த காய்ந்த இலைகள் எரியூட்டப்படுகிறது இதனால் அப்பகுதியில் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. மாநகராட்சி வாகனங்கள் இலைகளை வாரி எடுத்து செல்வதால் மற்ற குப்பைகளை எடுத்துச் செல்ல முடிவதில்லை.
சில நேரங்களில் ஹோட்டல்கள் வர்த்தக மையங்களில் மட்டுமே குப்பைகள் அகற்றப்படுவதால், மற்ற இடங்களில் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் தேக்கமாகி விடுகிறது. எனவே குடியிருப்பு பகுதிகள் மீதும் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஓ எம் பி ஆர் லேஅவுட் பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
ஒயிட்ஃபீல்டு பகுதியிலும் உதிர்ந்து காய்ந்து கிடக்கும் இலைகளை எரிக்கப் ப டுவது வழக்கமாகிவிட்டது. அங்கும் குடியிருப்போர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
இலைகள் மட்டுமல்லாமல், மருத்துவத்திற்கு பயன்படும் பொருட்கள், புகையிலை, பிளாஸ்டிக்குகள் ஆகியவைகளையும் எரிக்கின்றனர். இதனால் இப்பகுதி மாசு நிறைந்ததாக கருதப்படுகிறது. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரியமும், இதன் பேரில் கவனம் செலுத்தினால நல்லதா இருக்கும் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். பெலந்தோர், ஹரளூர் ஜின்ன சந்திரா தொன்டகண்ணஹள்ளி ஆகிய பகுதிகளிலும் சுற்றுப்புற சூழல் பாதிக்கிற வகையில் இலைகள் எரிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.