கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் மு.க ஸ்டாலின் மரியாதை

சென்னை: ஜூன்3 –
தமிழகத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
டிரோன் மூலமாக கருணாநிதியின் சிலைக்கு பூக்கள் தூவப்பட்டன. முதல்வரை தொடர்ந்து திமுக அமைச்சர்கள், எம்பிக்களும் மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.