கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சென்னை, ஆக. 7- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். இந்த அமைதி பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து தொடங்கிய அமைதிப் பேரணி சென்னை மெரினா நினைவிடத்தில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை நடைபெற்றது.
பேரணி நிறைவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.