“கருத்துக்கணிப்பு வாயிலாக ஏமாற்றுகிறார் மோடி” – சித்தராமையா

பெங்களூர், ஏப். 2- கர்நாடக முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான‌ சித்தராமையா நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் நிலவரம் குறித்து பாஜகவினர் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ரகசிய கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர். அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறுவதே கடினம் என தெரியவந்தது. அதனை மறைத்து 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜகவினர் பேசி வருகின்றனர். இத்தகைய பொய்யான கருத்துக்கணிப்பு வாயிலாக வாக்காளர்களை திசை திருப்பும் வேலையில் பாஜகவினர் இறங்கியுள்ளனர். பாஜக அமோக வெற்றி பெறும் என வாக்காளர்களிடம் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி, அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். கடந்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்த‌லில் பாஜக 200 இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக கூறினார்.
கர்நாடகாவிலேயே முகாமிட்டு தொகுதிவாரியாக பிரச்சாரம் செய்தார். ஆனால் பாஜக படுதோல்வி அடைந்து, காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.