கருப்பசாமி கோவிலிலில் அமாவாசை சிறப்பு பூஜை


தர்மபுரி,13,
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த நடப்பணஅள்ளி கிராமத்தில் உள்ளது கருப்பசாமி கோவில். இக்கோவிலில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகாதீபாரதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வாக கோவில் பூசாரி கத்தியின் மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும், கர்நாடக மாநில பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி த பூஜை பூஜைரிசனம் செய்தனர். பல வேண்டுதல்களை நிறைவேற்றிய மூலவருக்கு, பக்தர்கள் ஆடு,கோழி, மது மற்றும் சுருட்டு, மிளகாய்பொடி ஆகியவைகளை நேர்த்திக்கடன்களாக செலுத்து சாமியை வணங்கி வழிப்பட்டனர். ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.