கரும்பு ஏற்றி வந்தலாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப சாவு

பாகல்கோட்டே : ஜனவரி 26 – மூடுபனி சூழ்ந்திருந்த நிலையில் எதிரில் வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெளிவாக தெரியாத நிலையில் தவிர ஓட்டுனரும் தூக்க மயக்கத்தில் இருந்ததால் இன்று அதிகாலை வேகமாக வந்த கார் ஒன்று சாலை ஒருத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கரும்பு நிரம்பிய ட்ராக்டர் மீது மோதியதில் நான்கு பேர் இறந்துள்ள சம்பவம் பீலகி தாலூகாவின் தும்பரமாட்டி க்ராஸ் அருகில் நடந்துள்ளது. விஜ்யபுரா மாவட்டத்தின் ஹொனகனஹள்ளி கிராமத்தை சேர்ந்த மல்லு பூஜாரி (24) , கல்லப்பா கொவடகி (34) , காமாக்ஷி படிகேரா (35) , மற்றும் துக்காராம் தலவாடா (30) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள்.. பீலகி தாலூகாவின் தும்பரமாட்டி க்ராஸ் அருகில் ஹூப்ளி சோலாப்பூர் தேசிய நெடுஞசாலையில் நின்றிருந்த கரும்புகள் நிரம்பியிருந்த ட்ராக்டர் மாது அதிகாலை 4 மணியளவில் வேகமாக வந்த கார் மோதியுள்ளது . இந்த மோதலின் விளைவாக காரில் இருந்த நான்கு பேர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர் . இவர்கள் பாதாமியிலிருந்து ஹோனகனஹள்ளிக்கு சென்றுகொண்டிருந்தனர் என தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு எஸ் பி அமர்நாத் ரெட்டி மற்றும் பீலகி போலீசார் நேரில் சென்று ஆய்வுகள் நடத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.