கர்நாடகத்தின் பல பகுதிகளில் பருவ மழை தீவிரம்

பெங்களூரு, ஜூன் 10- மாநிலத்தில் நாளை முதல் பருவ மழை தீவிரமடைய இருப்பதுடன் மாநிலத்தின் கடலோர பகுதிகள் மற்றும் தென் உள் பகுதிகளில் கடும் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே மலை பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் பெரும் மழை பொழந்து வருகிறது. கடலோர மாவட்டங்களான தக்ஷிண கன்னட, உடுப்பி , உத்தர கன்னடா , மாவட்டங்களில் இன்று முதலே மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களான உத்தர கன்னடா , தக்ஷிண கன்னடா , மற்றும் உடுப்பி மாவட்டங்களில் ஜூன் 13 வரை மழை தீவிரமாயிருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலோர பகுதிகள் மற்றும் தென் உள் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவைக்கையாக எஸ் டி ஆர் எப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகள் மட்டுமின்றி சிவமொக்க , சிக்கமகளூரு , குடகு , ஹாசன் , பீதர் , கதக் , பெங்களூரு நகரம் , குலபுரகி , பெங்களூரு க்ராமந்திரம் , சித்ரதுர்கா , கோலார் , துமகூரு , கொப்பளள , தாவணகெரே , ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்புகள் உண்டு . மத்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்களின் படி இந்தாண்டு மாநிலத்தில் பருவ மழை 101 சதவிகிதமாக இருக்கும்.