கர்நாடக‌த்தின் பல மாவட்டங்களில் கனமழை: மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூரு, ஆக. 29: கர்நாடக‌த்தின் 14 மாவட்டங்களில் 3 நாள்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூரிலும் பலத்தை மழை பெய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பெங்களூரு உட்பட மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
பெங்களூரு, மைசூரு, ஹாசன், ஷிமோகா, தாவணகெரே, குடகு, ராமநகர், கோலார், சித்ரதுர்கா, பெங்களூரு கிராமம், சாம்ராஜநகர், சிக்கமகளூரு, சிக்கபள்ளாப்பூர் மற்றும் தும்கூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த‌ மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆடி மாதம் மழைக்காக அனைவரும் காத்திருந்தனர். ஆனால் மழை பெய்யவில்லை. மழை குறைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு நீர்த்தேக்கங்கள் வறண்டு வருகின்றன. இதனால் மாநிலத்தில் வறட்சி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மழைக்காக விவசாயிகள் உள்பட பலரும் வேண்டி வரும் நிலையில், மாநிலத்தில் பரவலாக‌ மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மழை குறைந்ததால் கேஆர்எஸ் அணையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இனியும் மழை பெய்யாவிட்டால் பெங்களூரில் தண்ணீர் பிரச்னை ஏற்படும். இதனால் தமிழ் நாட்டிற்கு காவிரியிலிருந்து காவிரியில் இருந்து தண்ணீர் தருவதிலும் சிக்கல் ஏற்படும். இதனால் கர்நாடகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ளவர்களும் கர்நாடகத்தில் மழை பெய்ய வேண்டும் என வேண்டி வருகின்றனர்.