கர்நாடகத்தின் 28 தொகுதிகளிலும்மோடி அலை – விஜயேந்திரா பேச்சு

பெங்களூரு,பிப்.14-
நாடு முழுவதும், கர்நாடகாவிலும் மீண்டும் மோடியின் அலை வீசுவதாக பாஜக மாநிலத் தலைவரும், எம்எல்ஏவுமான பி.ஒய்.விஜயேந்திரா கூறினார்
இன்று சஞ்சய்நகர் பூபசந்திரா மெயின் ரோட்டில் ஹெப்பல் மண்டல் அலுவலக திறப்பு விழாவில் அவர் பேசினார். மாநிலத்தின் 28 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜகவுக்கு பின்தங்கிய சூழல் இல்லை. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 28ல் பாஜக முன்னிலை வகிக்கும் சூழல் நிலவுகிறது. நரேந்திர மோடியின் பிரபலமும், மத்திய அரசின் திறமையான நிர்வாகமும் தான் இதற்கு காரணம் என விளக்கமளித்தார்.
இந்த தொகுதியில் பாஜக அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையாகவும் செயல்படுவோம். நாம் அனைவரும் நம்மை மோடியாக நினைத்துக் கொண்டு சிறந்த செயல் வீரர்களாக செயல்படுவோம் என்றார்.
மத்தியில் பாஜக 3-வது முறையாக ஆட்சிக்கு வருவதையும், நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்பதையும் நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
லோக்சபா தேர்தலின் மிகப்பெரிய சவால் நம் முன் உள்ளது. எந்த நேரத்திலும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படும் என்ற சூழ்நிலையில் உள்ளோம் என்றார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் பின்னடைவு ஏற்பட்டது. ஆளுங்கட்சியில் இருந்தவர்கள் 66 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி நிலையில் அமர்ந்துள்ளோம். ஆனால், தற்போது மீண்டும் அந்த ஆதரவு சூழல் ஏற்பட்டுள்ளது என்று மோடி கூறினார். மாநில முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான டி.வி. சதானந்த கவுடா, பெங்களூரு வடக்கு மாவட்டத் தலைவர் எஸ். ஹரிஷ், பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதி இணை கன்வீனர் சச்சிதானந்த மூர்த்தி, மண்டல தலைவர், நிர்வாகிகள் மற்றும் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.