கர்நாடகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத்

அகமதாபாத், மார்ச் 12: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடகத்தின் கலபுர்கி-பெங்களூரு, மைசூரு-டாக்டர் சென்ட்ரல் எம்ஜிஆர், திருவனந்தபுரம் முதல் மங்களூர் வரையிலான 10 புதிய வந்தே பாரத் ரயில்களுக்கு இன்று பிரதமர் மோடி பச்சைக்கொடி காட்டினார். கடந்த 10 ஆண்டுகால வளர்ச்சி வெறும் டிரெய்லர்தான், இன்னும் நிறைய இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இது தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளில், 85 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு, துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நாட்டின் ரயில் இணைப்புத் துறையில் புதிய வரலாறை படைத்தார்.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரயில் நிலையத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 10 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்து பேசுகையில், “நான் எனது வாழ்க்கையை ரயில்வே நடைமேடையில் தொடங்கினேன். அதனால் ரயில்வே இணைப்பு எவ்வளவு முக்கிய‌மானது என்று எனக்குத் தெரியும். அதனால்தான் கடந்த காலத்தில் 10 வருடங்களில் கடந்த அரசை விட 6 மடங்கு அதிகமாக ரயில்வே சேவையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்றார்.
முன்னதாக தாக்கல் செய்யப்பட்டு வந்த தனி ரயில்வே பட்ஜெட்டை நிறுத்தினோம். அதை மத்திய பட்ஜெட்டில் சேர்த்துள்ளோம். அரசுப் பணத்தை தேசத்தின் முன்னேற்றத்துக்கும், ரயில்வே வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். வளர்ச்சிப் பணிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மட்டுமல்ல, என்றார்.
10 வருட வளர்ச்சிப் பணிகள் டிரெய்லர் மட்டும்:
பத்து ஆண்டுகளில் நாட்டில் செய்த வளர்ச்சி பணிகள் வெறும் டிரைலர் மட்டுமே. இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இந்தியா வ‌ளமையான நாடு, இங்கு இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரத்திற்கு பின் வந்த அரசுகள் அரசியல் சுயலாபத்திற்கு பலவற்றிற்கு முன்னுரிமை கொடுத்தன. இதில் இந்திய ரயில்வேயின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.”வளர்ந்த இந்தியா’வுக்காக பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பல திட்டங்கள் துவக்கி வைக்கப்படுகின்றன. 2024ல், 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் அடிக்கல் 75 நாட்களில் முடிக்கப்படும்” என்றார். பயணிகள் ரயிலும் இயக்கம்:
அசன்சோல் மற்றும் ஹதியா, திருப்பதி மற்றும் கொல்லம் நிலையங்களை இணைக்கும் இரண்டு புதிய பயணிகள் ரயில்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பச்சைக்கொடி காட்டினார். பல்வேறு ரயில் நிலையங்களில் 50 ஜனவுஷதி மையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த மையங்கள் மக்களுக்கு மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகளை வழங்கும். 51 கதி சக்தி மல்டி மாடல் சரக்கு டெர்மினல்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

10 வந்தே பாரத் ரயில்கள்
கர்நாடகம், கலபுராகி-சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் பெங்களூரு, அகமதாபாத்-மும்பை சென்ட்ரல், செகந்திராபாத்-விசாகப்பட்டினம், மைசூரு‍-டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல்-சென்னை, பாட்னா-லக்னோ, நியூ ஜல்பைகுரி-பாட்னா, பூரி-விசாகப்பட்டினம், லக்னோ-டெஹ்ராடூன், ராஞ்சி-வாரணாசி-டி நிஜாமுதீன் இடையே 10 புதிய வந்தே பாரத் ரயில்கள் இன்று முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன.