கர்நாடகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை

பெங்களூரு, மே 11: சிலிக்கான் சிட்டி பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. அடுத்த
6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் மே 16 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று குடகு, சிக்கமகளூரு, ஷிமோகா மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உத்தர கன்னடா, உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஹாசன், தாவணகெரே, மண்டியா, மைசூரு, சாமராஜநகர், ஹாவேரி, பெலகாவி,
பாகல்கோட்டை, கத‌க், விஜயப்பூர் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.பீத‌ர், தார்வாட், கலபுர்கி, கொப்பல், ராய்ச்சூர், யாத்கிரி, பெல்லாரி, பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம், சிக்கபள்ளாப்பூர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, குடகு, கோலார், ராமநகரா, ஷிமோகா, தும்கூர், விஜயநகர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.