
பெங்களூர் : மார்ச். 14 – மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது . மாநிலத்தில் தற்போது வரை 132023 கொரோனா புகார்கள் பதிவான நிலையில் தற்போது 510 கொரோனா நோயாளிகள் இருப்பதுடன் வெறும் திங்கட்கிழமை மட்டுமே 62 புதிய கொரோனா புகார்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் மார்ச் 12 வரை கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் 4.5 சதவிகிதமாக உள்ளது. மாநகராட்சியின் சுகாதார பிரிவு சிறப்பு ஆணையர் த்ரிலோக் சந்திரா இது குறித்து கூறுகையில் சமீப நாட்களாக கொரோனா புகாரகள் சற்றே அதிகரித்து வருகின்றன. இந்த அதிகரிப்பு வெறும் கர்நாடகத்தில் மட்டுமே இல்லை. கடந்த 113 நாடகளில் முதல் முறையாக நாடு முழுக்க 500 புதிய புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் மருத்துவமனைகளில் பெறுவோர் எண்ணிக்கையும் குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் அதிகமாகிவருகிறது. நகரின் பௌரிங்க் மருத்துவனையில் 2022 டிசம்பரில் மூன்று கொரோனா புகார்களும் ஜனவரியில் ஆறும் பிப்ரவரியில் நான்கு புகார்களும் பதிவாகியுள்ளன. ஆனால் மார்ச் மாத 10 நாட்களில் ஏற்கெனவே 2 புகார்கள் பதிவாகியுள்ளன. இப்படி கொரோனா புகார்கள் மீண்டும் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் மக்கள் மாஸ்க் பயன் படுத்துவதை குறைத்து கொண்டதும் மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாததே காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.