கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைக்க பிஜேபி தீவிர முயற்சி

பெங்களூர், ஜன. 13-
கர்நாடக மாநிலத்தில் மீண்டும் பிஜேபி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பழைய மைசூர் பகுதிகளை பிஜேபி வசமாக்க தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பழைய மைசூர் பகுதிகளான
தென் மாவட்டங்களில் தமது சொந்த பலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வர வேண்டும் அதற்காக ஒக்கலிகர் ஓட்டுகளை பெறுவதற்கு தேவையான தந்திரங்களை மேற்கொள்ள உள்ளது.
இதுவரை தென் மாவட்டங்களில் பிஜேபிக்கு அசெம்பிளி தொகுதியில் குறைந்தபட்ச வெற்றி களே
கிடைத்து வந்தது.
முன்பு ஜே. டி. எஸ். கட்சிக்கு சாதகமாக இருந்தது. அங்கெல்லாம் முன்னாள் பிரதமர் தேவகோடாவின் ஆதிக்கமாக, அவர்களின் ஒக்கலிகர் சமுதாயத்தினர் பக்கபலமாக இருந்தார்கள்.
ஆனால் அண்மையில் அது காங்கிரசுக்கு சாதகமாக மாறியுள்ளது. எனவே இம்முறை தென் மாவட்டங்களில் ஒக்கலிங்க சமுதாயத்தின் பிரபல தலைவர்களை தம் பக்கம் இழுக்கும் பணிகளை பிஜேபி திட்டமிட்டு செயல்படுத்த தொடங்கியுள்ளது.
2019ல் காங்கிரஸ் ஜே.டி.எஸ். கூட்டணி அரசு ஆட்சியை கலைத்து பிஜேபி ஆட்சிக்கு வந்தபோது, பழைய மைசூரில் பிஜேபி பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் செயல்பட துவங்கியது.
இதன் காரணமாகத்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மண்டியாவுக்கு
வந்திருந்தார். தமது வழக்கமான தேர்தல் பிரச்சாரத்தை முன்வைத்து துவக்கினார்.அவரைத் தொடர்ந்து பிஜேபியின் தேசிய தலைவர் நட்டா கூட பல்வேறு மடங்களுக்கு சென்று பிஜேபியின் பலத்தை பெருக்க தமது தீவிர பணிகளை மேற்கொண்டார்.எனவே ,தான் பிஜேபியின் பொதுச் செயலாளரான அருண் சிங் அடுத்தும் அமோக ஆதரவில் பிஜேபி ஆட்சியை தொடரும் என்று நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.கர்நாடகத்தில் ராகுல் காந்தி ‘பாரத் ஜோடா’ யாத்திரையை நடத்தியதால், காங்கிரசுக்கு பலம் கிடைத்திருப்பதாக அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.ஆனால் இதை பிஜேபி பொதுச் செயலாளர் அருண் சிங் மறுத்துள்ளார்.2021 ல் எடியூரப்பா ஆட்சிக்குப் பின் பசவராஜ் பொம்மை இடம் பிஜேபி ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. 224 தொகுதிகளில் பிஜேபி 150 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.ஏனென்றால், பிஜேபியில் கோஷ்டி தகராறு இல்லை. பிரிவு பிளவுக்கு வாய்ப்பு இல்லை .ஆனால் காங்கிரஸ் அப்படி அல்ல. முதல்வர் பதவிக்கு சித்திராமையாவும் டி .கே. சிவக்குமாரும் முட்டி மோதி கொண்டிருக் கிறார்கள். எனவே, அவர்களின் பலவீனம் காங்கிரசுக்கு தோல்வியை ஏற்படுத்தும்.2019 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளில் 25 இடங்களில் பிஜேபி வெற்றி பெற்றது. எனவேதான், இம்முறை சட்டசபை தேர்தலிலும் அமோக அளவில் பிஜேபி வெற்றி பெறும் .ஒக்கலிங்க சமுதாயத்தை சேர்ந்த சி.டி. ரவி தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் .தென் மாவட்டங்களில் ஒக்கலிகளின் ஆதிக்கம் 64 சட்டசபை தொகுதிகளில் உள்ளது. எனவே இதை முழுமையாக ஆய்வு செய்த பிஜேபி தமது பலத்தை தென் மாவட்டங்களில் காண்பிக்க களம் இறங்கியுள்ளது.