கர்நாடகத்தில் இதுவரை 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி


பெங்களூரு: ஏப்.7-
கர்நாடக மாநிலத்தில் இதுவரை 50 லட்ச டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே. சுதாகர் நிருபர்களிடம் கூறுகையில் , “நேற்று மதியம் வரை மொத்தம் 45 லட்சத்து 13 ஆயிரத்து 857 பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர 5 லட்சத்து இரண்டாயிரத்து 838 பேர் இரண்டாவது டோஸையும் போட்டுக்கொண்டுள்ளனர் . மாநிலம் முழுக்க 5 ஆயிரத்து 564 அரசு மற்றும் 609 தனியார் உட்பட மொத்தம் 6 ஆயிரத்து 173 மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. நாட்டில் மூன்றாவது கட்ட தடுப்பூசி போடும் ஏற்பாடுகள் துவங்கிவிட்ட நிலையில் நம் மாநிலத்திலும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுக்க இது வரை 8 கோடிக்கும் அதிகமான பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.” என அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்