கர்நாடகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திaற்கு கனமழை

பெங்களூர், செப் 2- கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கைமாறிய மழை, இன்று முதல் பொங்கி எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் உட்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2 ,இன்று முதல் 7ம் தேதி வரை கனமழை பெய்யும்.
வடக்கு , உள் தெற்கு மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும்.
நேற்று கோலார், ராம் நகர் உள்பட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இன்றும் மழை தொடரும்.
பெங்களூர் நகரம், பெங்களூர் ரூரல், தும்கூர், சிக்கபல்லாபூர், மண்டியா, மைசூர், சிக்க மகளூர் , ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்.
குடகு, ஷிவமோகா, சாம்ராஜ்நகர் ,தென் கன்னடா, உடுப்பி, சித்ரதுர்கா, விஜயநகர், பெல்காம் ஹாவேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெல்லாரி, உடுப்பி, மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் மாநிலத்தில் போதிய மழை பெய்ய வேண்டும். அதேபோல் மழை வரும் என்று பலரும் காத்திருக்கின்றனர்.