கர்நாடகத்தில் இன்று 15,785 பேர் பாதிப்பு – 146 பேர் சாவு


பெங்களூர்.ஏப்.19
கர்நாடக மாநிலத்தில் தொற்று இன்றும் தொடர்கிறது கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியது
தலைநகர் பெங்களூரில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றையதை விட குறைவாக உள்ளது. பெங்களூரில் கடந்த 24 மணி நேரத்தில் 9, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள்
பெங்களூரு நகரில் மட்டும் இன்று 97 பேர் பலியானார்கள்.
.இதேபோல், ஹாசனில், மைசூரில் பதினொன்று பெரும், பெங்களூரு கிராமப்புரத்தில் 8 பேரும் , கல்பூர்கியில், தார்வாட்டில் தலா 3 பேரும், பிதர் சிக்கபல்லாபூரில் தலா இரண்டு பேரும், யாதகிரி , பெல்லாரி பெல்காம், ஹவேரி, குடகு, கோலார், ராமநகர, துமங்கூர், உத்தரகன்னடா மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியானார்கள்.
இன்று, மாநிலத்தில் 15785 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
7098 பேர் குணமாகியுள்ளனர், 146 பேர் இறந்துள்ளனர்
பெங்களூரில் கடந்த 24 மணி நேரத்தில், 9618 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது., 4240 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்