கர்நாடகத்தில் இன்று 33,733 பேர் பாதிப்பு 217 பேர் சாவு


பெங்களூர், மே 2: கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று, 33,733 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 217 பேர் பலியானார்கள்.
பெங்களூரில், 21,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 64 பேர் இறந்தனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள சுகாதார புல்லட்டின் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16011 ஆக உயர்ந்துள்ளது. இன்று 21,149 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். கர்நாடக மாநிலத்தில் கோரோனா வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது