கர்நாடகத்தில் இன்று 41,990 பேர் பாதிப்பு, 271 பேர் சாவு


பெங்களூரு, மே, 1-
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து உள்ளது..இன்று, ஒரே நாளில் 41,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 271 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 15794 . ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரில் இன்று 162 பேர் பலியானார்கள். 19353 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், சுகாதாரம்
குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள சுகாதார புல்லட்டின் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இன்று மருத்துவமனையில் இருந்து 18341 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இதன் ஒரு பகுதியாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது