கர்நாடகத்தில் இன்று 43,438 பேர் பாதிப்பு – 239 பேர் சாவு


பெங்களூர், மே 3- கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் இன்றும் தொடர்கிறது, ஒரே நாளில் 44,438 பேர் பாதிக்கப்பட்டனர். .
பெங்களூரில் மட்டும் இன்று 31544 பேர் பாதிக்கப்பட்டனர் 115 பேர் பலியானார்கள் என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள வெல் புல்லட்டின் தெரிவித்துள்ளது. இன்று
20901 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர் மாநிலத்தில். இறப்பு எண்ணிக்கை 16250 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இதன் ஒரு பகுதியாக மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது