கர்நாடகத்தில் இன்று 7 ஆயிரம் பேர் பாதிப்பு


பெங்களூர்.ஏப்.7-
கர்நாடக மாநிலத்தில்
கொரோனா நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, இன்று ஒரே நாளில் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது..
பெங்களூரு நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெங்களூரில் இன்று பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கியது.. கர்நாடகத்தில் இன்று 34 பேர் பலியானார்கள் இதில்
பெங்களூரில் மட்டும் 25 பேர் பலியானார்கள், கலபுரகி மற்றும் மைசூரில் தலா இரண்டு பேர் பலியானார்கள்.. இதேபோல், பெல்லாரி, பிதர், தக்ஷினா கன்னடம், ஹாசன், தும்கூர் மற்றும் விஜயபுரா ஆகியோர் மாவட்டங்களில் தலா ஒருவர் பலியானார்கள்.
மீதமுள்ள மாவட்டங்களில் கொரோனாவிலிருந்து மரணமும் ஏற்படவில்லை. கர்நாடக
மாநிலத்தில் இன்று 6976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று, 2794 பேர் குணமாகியுள்ளனர்
பெங்களூரில், கடந்த 24 மணி நேரத்தில் 4991 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது,
17812 நோயாளிகள் பெங்களூரு மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.