கர்நாடகத்தில் இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வு தொடங்கியது

பெங்களூரு, மார்ச் 1-
கர்நாடக மாநிலத்தில் இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வுகள் இன்று தொடங்கியது முதல் நாளான இன்று கன்னட மொழி தேர்வுகளை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினர். வரும்
26 ஆம் தேதி வரை பியூசி 2 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான 2 ஆம் ஆண்டுத் தேர்வுகள் மார்ச் 1 இன்று ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன., மேலும் தேர்வுகளை சுமுகமாகவும் ஒழுங்காகவும் நடத்த தேர்வு மையங்களைச் சுற்றியுள்ள 200 மீட்டர் சுற்றுளவு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க‌ப்பட்டுள்ளது.
மேலும் 2 ஆண்டு பியூசி தேர்வு நடைபெறும் நாட்களில், தேர்வு மையங்களின் 200 மீட்டர் சுற்றளவில் உள்ள ஜெராக்ஸ் கடைகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அடைக்கவும் மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில், 1,288 மையங்களில் இன்று துவங்கி, 22ம் தேதி வரை இரண்டாம் ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வுகள் நடக்கின்றன.
கர்நாடகாவில் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., பொதுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன. இதற்கான ஏற்பாடுகளை, கர்நாடக பி.யு.சி., போர்டு செய்துஉள்ளது. மாநிலம் முழுதும் 1,288 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 6,98,624 மாணவ – மாணவியர் எழுதுகின்றனர். காலை 10:15 மணிக்கு ஆரம்பித்து, மதியம் 1:30 மணிக்கு முடிகிறது.
முறைகேட்டை தடுக்கும் வகையில், தேர்வு மையங்களை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிறமேற்பார்வையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மொபைல் போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜி.பி.எஸ்., பொருத்திய வாகனங்களில் வினாத்தாள் கொண்டு வந்து, வினாத்தாள் கொண்டு வந்து, அதன்பின் அதே வாகனத்தில் விடைத்தாள்களை எடுத்து சென்று, மாவட்ட கருவூலத்தில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முறைகேடுகளை தடுக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையிலும்; படித்தவர்களின் விகிதத்தை உயர்த்தும் வகையிலும், மாநிலத்தில் முதல் முறையாக, மூன்று முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.