கர்நாடகத்தில் இறப்பு விகிதம் இறங்குமுகம்

பெங்களூர், அக்.18-
கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகள் குணம் அடைந்து அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 344 பேர் குணமடைந்துள்ளனர். இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது இன்று ஒரே நாளில் மொத்தம் 7 ஆயிரத்து 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், இன்று 8 ஆயிரத்து 334 குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று 51 பேர் பலியானார்கள். மாநிலத்தில் மொத்தம் கோவிட் 19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 765586 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 645825 குணம் அடைந்துள்ளனர் . தொற்றுநோயால் இதுவரை கர்நாடகத்தில் 10 ஆயிரத்து 478 பேர் இறந்துள்ளனர்.பெங்களூரில் கடந்த 24 மணி நேரத்தில், 25 பேர் இறந்துள்ளனர், பெங்களூரில் மொத்த இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 525 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட விவரம் பாகல்கோட் 138 பெல்காம் 71 பெங்களூர் கிராமம் 288 பிதர் 07 சாமராஜனகர் 60 சிக்மகளூர் 119 சித்ரதுர்கா 226 தட்சிணா கன்னட 183 தாவணகேர் 84 தர்வாடா 135 கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் தொற்று நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதும் இறப்பு சதவிகிதம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது