கர்நாடகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு

பெங்களூரு: ஜூன், 23- சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த நபர்களிடம் பெறப்பட்ட மாதிரியை ஆய்வு நடத்தியதால் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரசான பி.ஏ-2 பாதிப்பு அதிகம் இருக்கிறது. கர்நாடகத்தை பொருத்த வரையில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை டெல்டா வைரஸ் பாதிப்பும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது. கடந்த மாதம் (மே) முதல் இந்த மாதம் (ஜூன்) வரை ஒமைக்ரான் பி.ஏ.-2 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த புதிய வைரசின் மாறுபாடுகள் கர்நாடகத்தில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.