பெங்களூர் : செப்டம்பர் . 26 – மாநிலத்தின் கீழ் காணும் மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பல பகுதிகளில் மழை குறைபாடு இருக்கும் நிலையில் சில பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருகிறது . இந்த வாரம் முழுக்க பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது . தவிர கடலோர மாவட்டங்களான உத்தர கன்னடா , உடுப்பி மற்றும் தக்ஷிண கன்னடா ஆகிய மாவட்டங்களில் வரும் 27 வரை கடும் மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது. இதே வேளையில் மாநிலத்தின் 195 மாவட்டங்களுக்கு வறட்சி நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த மாவட்டங்களில் மக்கள் தகுந்த மழை இல்லாமல் சிரமத்தில் உள்ளனர். இது மட்டுமின்றி மைசூர் , மண்டியா , துமகூர் , குடகு , ஹாசன் , பெல்லாரி , மற்றும் கோலார் மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்திற்கு அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் பெங்களுருவில் அடுத்த ஒரு வாரத்திற்கு பலத்த மழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .