கர்நாடகத்தில் ஓயாத கனமழை

பெங்களூரு, நவ.22 – மாநிலத்தில் பெய்துவரும் அகால மழை தற்போதைக்கு நிற்கும் வாய்ப்புகள் தென்படவில்லை. ஏற்கெனவே மழை மற்றும் வெள்ளங்களால் லட்சக்கணக்கான ஹெக்டேர் பகுதிகளில் விளைந்து நின்றிருந்த பயிர்கள் முழுதும் நாசமடைந்துள்ளன. இதன் விளைவாய் காய்களின் விலைகள் விண்ணை முட்டியுள்ளது. இம்மாதம் 29 வரை மழை தொடரும் வாய்ப்புகள் உள்ளது. மாநிலத்திற்கு மேலும் ஒரு புயலின் பீதி எதிராகியுள்ளது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறவுள்ளது. இதன் விளைவாய் தெற்கு உள்பகுதிகளில் பெருபாலான பகுதிகளில் இன்னும் மூன்று நான்கு நாட்கள் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது. பெங்களூரு நகரம் , பெங்களூரு கிராமாந்தரம் , ராம்நகர் , கோலார் , சிக்கபள்ளாபுரா , மைசூரு , சாமராஜநகர் , துமகூரு , மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. தற்போது பெய்துவரும் மழை நவம்பர் 25 வரை தொடர உள்ள நிலையில் மாநிலத்தில் மேலும் ஒரு புயல் தாக்கும் வாய்ப்புகளுள்ளன. மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்து வந்த மழையால் இது வரை 24 பேர் இறந்துள்ளனர் . 1600க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. சிக்கபள்ளாபுரா ,கோலார் , மைசூரு , ராம்நகர் , மற்றும் சில மாவட்டங்களில் லட்சக்கணக்கான பகுதிகளில் விளைவித்த பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும்சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். 2200 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. 125 பள்ளி கட்டிடங்கள் , 39 பொது மையங்கள் , பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 658 வீடுகள் முழுதுமாக இடிந்து விழுந்துள்ளன . 8495 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. ஹூப்ளி , கதக் , தார்வாட் , கொப்பலா , பாகல்கோட்டே , விஜயபுரா , ராயசூரு , பீதர் , பெல்லாரி , மாவட்டங்களில் இன்றும் மேகம் சூழ்ந்த வானமாயுள்ளது. சில இடங்களில் மழையும் பெய்துள்ளது. கடலோர மற்றும் உள் பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சிவமொக்க , உடுப்பி , சிக்கமகளூரு , தக்ஷிண கன்னடா , ஹாசன் , ராம்நகர் , குடகு , மண்டியா ஆகிய இடங்களில் மழை தொடரும் . கடந்த 10 நாடகளாக மாநிலத்தில் தொடர்ந்து பெய்த மழையால் 2 லட்சம் ஹெக்டேர் பகுதிகளில் பயிரகள் நாசமடைந்துள்ளது. என வியூகிக்கப்பட்டுள்ளது . இதற்கிடையில் முதல்வர் பசவராஜ் பொம்மை மழையால் சேதமடைந்துள்ள சிக்கபள்ளாபுரா மாவட்டத்திற்கு நேரில்சென்று மேற்பார்வை இட்டுள்ளார். இன்றும் கோலார் மாவட்டத்திற்கு முதல்வர் செல்ல உள்ளார். இந்த மாவட்டத்தில் அகால மழையால் பயிர்கள் நாசமடைந்திருப்பதுடன் விவசாயிகள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.