கர்நாடகத்தில் கஞ்சா ஒழிக்க தீவிர நடவடிக்கை

பெங்களூர், ஜூலை 25-கர்நாடக மாநிலத்தில் கஞ்சா போதை பொருள் ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த 15ஆம் தேதி டி.சி. ஹள்ளி வட்டார சாலை போக்குவரத்து அலுவலகம் அருகில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் அரவிந்த் (26) பவன் குமார் (27) அம்ஜத் (27) ஆகிய மூவரை கைது செய்து6.38 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் 20 ஆம் தேதி எலக்ட்ரானிக் சிட்டி, ஹுமாவு அருகே பிரபு என்பவர் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்தது.
இதை அடுத்து நைஸ் சாலை அருகில் காத்திருந்த போலீசார் அவ்வழியே வந்த பொலிரோ சரக்கு வாகனத்தை சோதனை யிட்டனர் . அப்போது ‘புஷ்பா’ பட பாணியில் மூட்டைக்குள் அடியில் மறைத்து கஞ்சா கடத்தியது தெரிய வந்தது.
கடத்தி வந்த பிரபு (27) நஜீம் (26) பிரசாத் (27) பட்டி சாய் சந்திரா பிரகாஷ்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.