கர்நாடகத்தில் கன மழை: இடி மின்னல் தாக்கி 7 பேர் சாவு


பெங்களூரு, மே 4: கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னல் தாக்கி 7 பேர் பலியானார்கள். யாதகிரி தாவனகெரே விஜயநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையால் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாதகிரியில் ஒரு பண்ணையில் வேலைக்குச் சென்ற சித்தம்மா (40) இறந்துள்ளார். விஜயநகர் மாவட்டத்தில் ராஜசேகர் (33), சின்னபுரி (40), வீரண்ணா (50), பத்ரெப்பா (43) ஆகியோர் பலியானார்கள். தாவனகெரேவில் மாலையில் இடியுடன் கூடிய கனமழை. பெய்தது மின்னல் தாக்கி ரவிக்குமார் (32), ரமேஷ் (30) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், பெங்களூரின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. மதியம் வரை உச்சந்தலை சூடாக வெயில் கொளுத்தியது. மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்தியாவின் தெற்கு தீபகற்பத்திலும், அடுத்த 5 நாட்களில் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு கர்நாடகாவில் மே 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ட்வீட் செய்துள்ளது.