கர்நாடகத்தில் காலியாகும் 11 மேலவை இடங்களுக்கு தேர்தல்

பெங்களூர், மே 11-
கர்நாடகாவின் சட்ட மேலவைக்கு காலியாகும் 11 இடங்களுக்கான ‘தேர்தல் கால அட்டவணை’ விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
ஆளும் காங்கிரஸில் வாய்ப்புக்கான அழுத்தங்கள் அதிகமாக எழுந்துள்ளன.
மேலவை உறுப்பினர் பதவிக்கு அக்கட்சி நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் போட்டியிட தீவிர முயற்சியில் இடம் பெற்றுள்ளனர்.
பிஜேபியின் ஆறு உறுப்பினர்கள், காங்கிரஸின் நான்கு உறுப்பினர்கள்,
மற்றும் ஜே.டி.எஸ். கட்சியின் ஒரு உறுப்பினர் என மொத்தம்1 1 மேலவை உறுப்பினர்கள் ஜூன் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார்கள் .
சட்டசபை பலத்தின் அடிப்படையில் ஆளும் காங்கிரசுக்கு ஏழு முதல் எட்டு இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக ஜாதி, சமூகம் வட்டார ஒதுக்கீடு வாய்ப்புக்கான முயற்சிகளை பல பிரமுகர்கள் தொடங்கியுள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் தந்தைக்காக வருணா தொகுதியை விட்டுக் கொடுத்த டாக்டர் யத்திந்திரா சித்தராமையா இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேலவையில் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
போட்டியில் யார் யார்?
கர்நாடக மாநில காங்கிரஸ் மீடியா மற்றும் கம்யூனிகேஷன் தலைவர் ரமேஷ் பாபு, மற்றும் பொருளாளர் வினய் கார்த்திக், மீடியா இணைத் தலைவர் ஐஸ்வர்யா
மகாதேவ், மாநில பொதுச் செயலாளர் ஆஹா சுல்தான், தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி. வி. ஸ்ரீநிவாஸ், மாநில காங்கிரஸ் நிர்வாகத் துறை பொதுச் செயலாளர் விஜய் தங்குந்த்,
வழக்கறிஞர் சி. எஸ். துவார்கநாத்,
மஹிலாக் ஷி ராஜண்ணா, டி. தேவராஜ் அர்ஸ் பேரன், மற்றும் உத்தரவாத அறங்காவலர் ஆணையத்துணைத் தலைவர் சூரஜ் ஹெக்டே, டாக்டர் ஆர்த்தி கிருஷ்ணா, குடியுரிமை இல்லாத இந்தியர் பிரிவு துணைத் தலைவர் என்.ஆர்.ஐ. மகிளா காங்கிரசின் புஷ்பா அமர்நாத், ஆகியோர் முயற்சிப்பவர்களில் முக்கிய நபர்களாக பேசப் ப்படுகிறது.
தற்போது மேல்சபையில் உள்ள என். எஸ். போசராஜ்க்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
முதல்வரின் அரசியல் செயலாளர் கே. கோவிந்தராஜ் தொடர்ந்து மூன்றாவது முறையாக மேலவை உறுப்பினர் பதவிக்கு முயற்சித்துள்ளார்.
இதற்கிடையில் பிஜேபியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த தேஜஸ்வினி கவுடா, கே.பி. நஞ்சுண்டி, ஆகியோரும் வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளனர்.
ஓய்வு பெறுபவர்கள் யார் யார்?
காங்கிரசின் அரவிந்த் குமார் ஹராலி, என்.எஸ். போஸராஜு, கே.கோவிந்தராஜ், மற்றும் கே ஹரிஷ் குமார். பிஜேபியின் ரகுநாத் ராவ் மல்காப்புரா, என். ரவிக்குமார்,
எஸ் ருத்ரே கவுடா, முனிராஜ் கவுடா,
ஜேடிஎஸ் கட்சி யின்
பி .எம். பரூக் ஆகியோர் ஜூன் 17ம் தேதி கவுன்சிலில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள்.
பி.ஜே.பி.ல் இருந்து விலகிய தேஜஸ்வினி கவுடா, கே. பி. நஞ்சுண்டி ஆகியோர் மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.