கர்நாடகத்தில் குரங்கு காய்ச்சல் இல்லை : அமைச்சர் உறுதி

பெங்களூர்: ஆகஸ்ட். 6 – மாநிலத்தில் இதுவரை எவ்வித குரங்கு காய்ச்சல் புகார்கள் வரவில்லை என சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்துள்ளார். உலக ரத்தக்குழாய்கள் தினத்தை முன்னிட்டு டவுன் ஹாலிலிருந்து கண்டீரவா ஸ்டேடியம் வரை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த தொடர் ஓட்டத்தை துவக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சமீபத்தில் இதியோபியா நாட்டிலிருந்து வந்த பயணி ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது . அவருடைய ரத்த மாதிரியை சோதனைக்கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது . அதன் அறிக்கை நெகட்டிவ் என வந்துள்ளது. அவருக்கு குரங்கு காய்ச்சல் இல்லை . ஆனால் பெரியம்மை தாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது . மாநில அரசு குரங்கு காய்ச்சலை தவிர்க்க கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தவிர மாநிலத்தின் எல்லை பகுதிகளில் கடும் எச்சரிக்கை வகிக்கப்படுகிறது . விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகள் மீது கவனம் செலுத்தி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. விமானநிலையங்களில் இருபத்தி நான்கு மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்த அனைத்து நடவடிக்கைகளினால் அதிக வெளிநாட்டு பயணிகள் வரும் நம் மாநிலத்தில் ஒரு குரங்கு காய்ச்சல் புகாரும் இதுவரை தென்படவில்லை. ஒரு வேளை குரங்கு காய்ச்சல் தென்பட்டால் அத்தகைய நேயாளியின் சிகிச்சைக்கும் மருத்துவமனைகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்று உலக ரத்தக்குழாய்கள் தினம் . காலின் ரத்தக்குழாய்கள் சம்மந்த நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஊட்டும் அவசியம் உள்ளது. உலகில் ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒருவர் இந்த ரத்தக்குழாய் பிரச்சனையால் கால்களை இழக்கிறார்கள் . அதனால் இந்த வியாதி குறித்து அதிகளவில் விழிப்புணர்வு அவசியம். அதிக நேரம் நின்றபடி பணியாற்றும் மருத்துவர்கள் , போலீசார் மற்றும் வேறு பலருக்கு இந்த பிரச்சனைகள் அதிகம். இது குறித்து விழிப்புணர்வு மூட்டும் அளவிற்கு இந்த வியாதியை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அமைச்சர் கே சுதாகர் நிருபர்களிடம் தெரிவித்தார் . இன்று நடந்த தொடர் ஓட்டத்தில் கன்னட திரைப்பட நடிகர்களான பிரேம் , ப்ரஜ்வல் தேவராஜ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.