கர்நாடகத்தில் கூடுதல் தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம்

பெங்களூர் ஜனவரி 13
லோக்சபா தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று கட்சி மேலிடம் எதிர்பார்க்கிறது. வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளில் அமைச்சர்கள் அனைவரும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். அவர் செய்தியாளிடம் அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது: டெல்லியில் நடந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கட்சி மேலிடத்தின் எதிர்பார்ப்பு என்னவென்று, ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசியது.
முன்னதாக மாநிலத்தில் ஒருமுறை காங்கிரஸ்
கட்சி 27 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. அத்தகைய முடிவைத்தான் கட்சி மேலிடத் தலைவர்கள் விரும்புகிறார்கள்.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தோல்வி அடைந்தால், பொறுப்பேற்றுள்ள அமைச்சர் தன் பணியை போதிய அளவில் செய்யவில்லை என உணர வேண்டி வரும். வேட்பாளர் குறித்து விவாதம் எதுவும் நடக்கவில்லை. அமைச்சர்கள் போட்டியிடுவது குறித்து எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை
மாநிலத்தில் மூன்று துணை முதல்வர்கள் நியமனம் குறித்து விவாதிக்கவில்லை. தேர்தல் காலம் என்பதால் வெளிப்படையாக யாரும் அறிக்கைகளை வெளியிட வேண்டாம். முன்னாள் எம்.பி. முத்தே ஹனுமே கவுடா காங்கிரஸில் சேர என்னை சந்தித்து அணுகினார் இது குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். விரைவில் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு டாக்டர் பரமேஸ்வர் தெரிவித்தார்.