
பெங்களூர், அக்.19-
பெங்களூரில் அதிகரிக்கும் டெங்கு குறித்து சமூக ஊடக தனமான லோக்கல்ஸ் நடத்திய ஆய்வில், 1,752 பேர் பங்கேற்பாளர்களில் ஏறத்தாழ 72 சதவீதம் பேர் கொசு அச்சுறுத்தலை தடுக்க மாநிலத்தின் மாநகராட்சி, மற்றும் பஞ்சாயத்துகள் நடவடிக்கைகளை எதுவும் செய்யவில்லை என்று கருதுகிறார்கள்.
பங்கேற்பாளர்கள் 72% பேர் கடந்த 45 நாட்களில் தங்கள் பகுதியில் போக்கிங் அல்லது கொசு ஒழிப்பு தெளிப்பு பயன்படுத்தவில்லை.
71% பேர் ஒவ்வொரு பருவ மழையிலும் இப்படி தான் என்று கொசுக்கள் பெருகுவது குறித்து கூறி வருகிறார்கள். கணக்கெடுப்பு முடிவுகள் சிறந்த கணக்கெடுப்பு மூலம் வலுவான தடுப்பு நடவடிக்கைகளில் அவசியத்தை சுட்டிக் காட்டினர் .ஆயினும் மாநகராட்சி அதிகாரிகள் கொசு அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கிறார்கள். கடந்த 20 நாட்களில் 3 லட்சம் வீடுகளில் வீடு வீடாக சென்று ‘லார்வா’ கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர். இவர்களில் ஃபோக்கிங், ஸ்பிரே ,ஆகியவைகள் பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று மாநகராட்சி சுகாதாரத்துறை சிறப்பு ஆணையர் திரிலோக் சந்தர் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே விழிப்புணர்வு பரப்புவதற்காக தகவல் கல்வி மற்றும் தொடர்புடைய ஐ.இ.சி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்கள் பற்றாக்குறையே இதன் செயல் பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
பேரூராட்சிகள் சரியாக வேலை செய்யவில்லை. கொசுக்கள் தொல்லையை கட்டுக்குள் வைக்க பல்வேறு வழிகளை கையாள்வது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கொசுக்கள் விரட்டிகள், சுருள்கள், ஸ்ப்ரே ஆகியவை அதிக பயன்படுத்த நடவடிக்கையில் ஒன்றாகும். ஒன்பது சதவீதம் பேர் மட்டுமே தனியார் போக்கிங் சேவைகளை தேர்ந்தெடுத்துள்ளனர். ரூபாய் 200 முதல் 500 வரை செலவழிக்கப்பட்டதாக 33 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பங்கேற்பாளர்களில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே ஐந்தாயிரம், இரண்டு சதவீதம் பேர், 2000 முதல் 5000 வரை செலவழித்தனர்.
வீடு வீடாக சென்று லார்வா ஃபோக்கிங் மற்றும் ஸ்பிரே செய்து வருகின்றனர்.