கர்நாடகத்தில் கொரோனா சுனாமி


பெங்களூர் ஏப்., 22
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் சுனாமியாய் தாக்குகிறது. இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் தொற்று எண்ணிக்கை கிடுகிடு என உயர்ந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 15, ஆயிரத்தை தாண்டியது
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 123 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
பெங்களூரு நகரில் மட்டும் இன்று 68 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்
. கல்பூர்கியில் 11, தும்கூர், தார்வாட் மற்றும் பெல்லாரி ஆகிய இடங்களில் 5 பேர், ஹாசன் மண்டியா பெங்களூர் கிராமப்புரம் ஆகிய மாவட்டங்களில் 4, பிதர் மைசூரில் மாவட்டங்களில் தலா 4, பாகல்கோட், சிக்கபள்ளாபூர், குடகு உத்தரா கன்னட மாவட்டங்களில் தலா 2 பேர் பலியாகி உள்ளனர்
இன்று 5624 பேர் குணம் அடைந்து உள்ளனர்
பெங்களூரில் கடந்த 24 மணி நேரத்தில், 15244 கொரோனா வைரஸ் வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, பெங்களூரில் 2257 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர .