கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல்

பெங்களூர், ஜூன் 26-
கர்நாடக மாநிலத்தில் இதுவரை 5,374 பேருக்கு டெங்கு நோய் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநகராட்சியின் அதிகார வரம்பில் உள்ள ஒரு மணி நேரத்திற்கு இரண்டு பேர் வீதம் 1,230 பேருக்கு நோய் பரவுவது கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் மாநில அரசு தாமதமாக விழித்து இப்போது அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிலைமை தீவிரம் அடைந்து வருவதை உணர்ந்த முதல்வர் சித்தராமையா சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தி, தேவையான நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். டெங்கு பாதிப்பு தொடர்பாக அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் ரத்த சோதனைகள் சேகரிப்பு மற்றும் தேவையான சிகிச்சைக்கான ஊசிப் போட ஏற்பாடு செய்ய வேண்டும்
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய சிகிச்சை வசதிகள் மற்றும் மருந்துகள் விரைவில் கிடைப்பது உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என உத்தரவிட்டார்.ஆஷா பணியாளர்கள் செவிலியர்கள் மாணவிகள் என்.எஸ்.எஸ். மாணவர்கள் மற்றும் இதர தன்னார்வலர்கள் வீடு வீடாக ஆய்வு நடத்தி நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தூய்மை மற்றும் நீர் நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட வேண்டும். டெங்கு காய்ச்சலின் மூலத்தை கண்டறியவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மாநகராட்சிக்கு 1,230 பேருக்கு டெங்கு பரவி உள்ளதாக பதிவாகியுள்ளன என்பதையும் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதையும், முதல்வர் சித்தராமையா தீவிரமாக கவனித்தார்.ஒவ்வொரு வாரமும் மாநகராட்சி நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சுகாதாரத் துறைகள் இணைந்து காய்ச்சல் தடுப்பு குறித்து ஆய்வு நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.டெங்குவால் இறப்பு விகிதம் என் ஜீரோ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.0.5 % மேல் இல்லை என்றார். மாநிலத்தில் இறப்பு சதவீதம் 0.09 சதவீதம் குறைவாக உள்ளது. இதனால் கவலைப்படத் தேவையில்லை.இருப்பினும், பெங்களூர், சிக்கமகளூர், மைசூர், ஹாவேரி, ஷிமோகா, சித்ரதுர்கா, மற்றும் தென் கன்னடா மாவட்டங்களில் அதிக எண்ணிக்கை யிலான டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளன.இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் பரிசோதனை குறைக்க கூடாது.சோதனையை அதிகரிக்கவும், பாதிப்புகளை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கவும் வேண்டும் என, சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளார்