கர்நாடகத்தில் தண்ணீர் பஞ்சம்

பெங்களூர்,மார்ச். 17
கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கோடை காலம் துவங்கும் முன்பே மக்கள் தண்ணீருக்காக அலையும் காட்சியை காண முடிகிறது
மாநிலத்தில் கோடை காலம் இன்னும் தீவிரமடையாத நிலையில் ஏற்கெனவே பாதிக்கு பாதி மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மாநிலத்தின் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கியுள்ளது. இதனால் முன்வரும் நாட்களில் பல்வேறு பிரச்சனைகளுக்கு இதே காரணமாகும் என சுற்ற சூழல் மேலாண்மை மற்றும் ஆய்வு மையம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசு துறைகள் வாயிலாக தகவலைகளை சேகரித்து நிலத்தடிநீர் மற்றும் நீர்த்தேக்க நீர் அளவுகள் , வனப்பகுதிகள் , பொதுமக்கள் , விவசாயம் மற்றும் கால்நடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் நீரின் அளவு சராசரி ஆண்டின் மழை , தவிர கடந்த பதானுகளில் மாநிலத்தில் ஏற்பட்ட சீதோஷ்ண நிலை மாற்றங்கள் என அனைத்து குறித்தும் தகவல் சேகரித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெங்களூர் கிராமாந்தரம் முதல் இடத்தில் உள்ளது. மற்றபடி ராய்ச்சூர் , சிக்கபல்லாபுரம் , கலபுரகி , கதக் , கொப்பலா , பெல்லாரி , பீஜாப்பூர் , பீதர் , மற்றும் பெலகாவி , பெங்களூர் நகரம் 12வது இடத்தில் உள்ளது . இத்துடன் கோலார் , பாகல்கோட்டே , தாவணகெரே , யாதகிரி , மாவட்டங்களிலும் குடிநீர் பற்றாக்குறைகள் அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரங்களின்படி உடுப்பி மாவட்டம் இந்த குடிநீர் தட்டுப்பாடுகளிலிருந்து குறைந்த அளவில் பாதிக்கப்பட்டிருப்பதுடன் உத்தர கன்னடா தக்ஷிணகன்னடா , குடகு மற்றும் சிவமொக்கா ஆகிய மாவட்டங்கள் அடுத்த இடத்தில் உள்ளன. ஆனாலும் சீதோஷ்ண நிலை மாற்றங்கள் இந்த இந்த பகுதிகளில் பெருமளவில் மாற்றங்களை கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .