
பெங்களூர், மார்ச் 4- கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பல்வேறு அமைப்பினர் சர்வேக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பாப்புலர் போல்ஸ் எனும் அமைப்ப சார்பில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? என்ற கேள்விக்கு மக்கள் ஆச்சரியமான பதிலை அளித்துள்ளனர். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை இருக்கிறார். கடந்த 2018ல் அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போது கர்நாடகா சட்டசபையின் காலம் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த முறை அங்கு நான்கு முனை போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் தேர்தல் பணியை துவங்கி நிலையில் ஆம்ஆத்மி கட்சியும் களமிறங்க வியூகம் வகுத்து வருகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியைமக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தனிப்பெரும்பான்மையை பெற அனைத்து கட்சியினரும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது ‛பாப்புலர் போல்ஸ்’ புதிய சர்வே முடிவு வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தல் குறித்து பாப்புலர் போல்ஸ்(Popular Polls) எனும் அமைப்பு தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியது. 1.12 லட்சம் பேரிடம் சர்வே இந்த கருத்து கணிப்பானது 2022 நவம்பர் மாதம் 10ம் தேதி முதல் 2023 ஜனவரி 30ம் தேதி வரை இந்த கருத்து கணிப்பு நடந்தது. மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் வசித்து வரும் 1 லட்சத்து 12 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு இந்த கருத்து கணிப்பானது மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாப்புலர் போல்ஸ் சர்வே வெளியாகி உள்ளன. அடுத்த முதல்வர் யார்? அதன்படி கர்நாடகாவில் அடுத்த முதல்வராக யார் வேண்டும்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு மக்கள் பதிலளித்தனர். இதில் அதிகமான மக்கள் அளித்த பதில் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.