கர்நாடகத்தில் நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமல்


பெங்களூர், ஏப். 19- கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் கட்டுப்பாடுகள் மிக கடுமையாக அமல் படுத்தப்பட உள்ளன. கொரோனா கட்டுப்பாட்டுக்கு புதிய கடுமையான விதிகள் நாளை முதல் செயல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சுதாகர் தெரிவித்தார். நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுக்க லாக்டவுன் செயல்படுத்தப்படுவது குறித்து அதிக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் லாக்டவுன் என்பது கொரோனா கட்டுப்பாட்டுக்கு ஒரே தீர்வு அல்ல. கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றார். தலைநகர் பெங்களூர் உட்பட மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டை கடுமையாக்குவது தொடர்பாக உயர்மட்டக் கூட்டம் இன்று இறுதி செய்யப்படும் என்றார். சில நடவடிக்கைகள் குறைக்கப்பட வேண்டும். இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் எடியூரப்பா, மருத்துவமனையிலிருந்து வீடியோ கான்பரன்சிங்கில் பங்கேற்பார் என்று அமைச்சர் சுதாகர் கூறினார்.