கர்நாடகத்தில் பலத்த பாதுகாப்பு

லக்னோ ( உத்தரப்பிரதேசம் ) ஜனவரி. 19 – அயோத்யாவில் வரும் 22 அன்று ராமர் கோயிலில் ராமர் சிலை நிறுவ உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக மாநிலம் முழுக்க எவ்வித அசம்பாவிதங்களும் நடப்பதை தவிர்க்கும் நோக்கில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகரம் மட்டுமின்றி மாநிலத்தின் பதட்ட மற்றும் அதி பதட்ட பகுதிகள் , தொழுகை மையங்கள் , ஆகிய இடங்களில் கூடுதல் போலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜனவரி 22 அன்று எந்த போலிஸாருக்கும் விடுமுறை அளிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது . தவிர ஏற்கெனவே விடுப்பில் இருக்கும் போலீஸ் ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது . இதற்க்கு முன்னர் மாநிலத்தில் நடந்த இன கலவரங்கள் குறித்து தகவல்கள் சேகரித்துள்ள போலிசார் இத்தகைய கலவரங்களில் ஈடுபட்டவர்கள் மீதும் நோட்டம் வைத்துள்ளனர். தவிர அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் மத குருக்களை அழைத்து அமைதி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் இது குறித்து தங்கள் சமுதாயத்தினருக்கு ஆலோசனை வழங்கவும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 22 அன்று மாநிலத்தில் எவ்வித மத ஊர்வலங்களுக்கும் அனுமதி இல்லை . அன்று மாநிலம் மற்றும் நகரில் அமைதியை நிலைநாட்ட வேறு மாவட்டங்களிலிருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மண்டியா , ராம்நகர் மற்றும் சிக்கபள்ளாபுரா உட்பட மாநிலத்தில் பல பகுதிகள் இன கலவரங்களுக்கு காரணமாகும் பகுதிகள். இதே போல் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அயோத்யா நகரில் வரும் 22 அன்று ராமர் சிலை நிறுவப்படுவதை தொடர்ந்து அயோத்தி நகர் முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்டுள்ள நிலையில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் மூன்று சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் சிறப்பு போலீஸ் இயக்குனர் (சட்டம் மற்றும் பாதுகாப்பு) ப்ரஷாந்த் குமார் இது குறித்து தெரிவிக்கையில் அயோத்யா மாவட்டத்தில் தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சந்தேகத்துக்குரிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் . மாநில அரசு மற்றும் போலீஸ் தலைமை அலுவலகத்தின் உத்தரவின் பேரில் நடந்து வரும் சோதனைகள் தொடர்பாக அயோத்யா மாவட்டத்தில் மூன்று சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவர்கள் எவ்வித தீவிரவாத இயக்குதுடனும் தொடர்பு கொண்டிருப்பதாக இது வரை தெரிய வர வில்லை . வரும்ஜனவரி 22 அன்று ராமர் கோயில் திறப்பு விழா நடக்க உள்ள சமயத்தில் indha சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேச அரசும் டிரோன்கல் வாயிலாக நகரம் முழுக்க மேற்பார்வையிட்டு வருகிறது. தவிர நவீன தொழில் நுட்பத்தில் சி சி டி வி காமிராக்கள் மற்றும் என் வி டி தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 22 அன்று நடக்கவுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோதி , மத்திய அமைச்சர்கள் மற்றும் 7000க்கும் மேற்பட்ட அனைத்து இனத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோதி கடும் விரதம் மேற்கொண்டு வருகிறார். ஜனவரி 22 அன்று வாரணாசியின் தலைமை அர்ச்சகர் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளார்.ஜனவரி 14 முதல் 22 வரை அயோத்யாவில் அமிர்த மஹோற்சவம் கொண்டாடப்படுகிறது ராமர் கோயில் கும்பாபிஷேக நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அயோத்யாவில் ராம பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமர் சிலை நிறுவப்படுவதற்காக கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருந்த ராம் பக்த்ர்ககள் தற்போது அலை அலையாக அயோத்தி நோக்கி படை எடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.