கர்நாடகத்தில் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு


பெங்களூர், ஏப். 19- கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்கள், போராட்டம் மற்றும் மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரிப்பு நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தேர்வுகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குல்பர்கா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு-
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பீதி உள்ள நிலையில், இன்று துவங்குவதாக இருந்த குல்பர்கா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது நான்காவது செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குல்பர்கா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சோனார் நந்தப்பா அளித்துள்ள விபரத்தில், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் மற்றும் வைரஸ் தொற்று விதி இருப்பதால் ஏப்ரல் 19 இல் ஆரம்பமாக வேண்டிய இரண்டாவது நான்காவது செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தாவணகெரே பல்கலைக்கழகம் தேர்வுகள்-
வெண்ணை நகரமான தாவணகெரேயில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த பி.ஹேட்., தேர்வுகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது இதுகுறித்து அதன் துணை வேந்தர் டாக்டர் எச். எஸ். அனிதா தெரிவித்திருப்பதாவது-
கொரோனா தொற்று மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக தாவணகெரேயில் நடக்கவிருந்த பி.ஹெட் தேர்வை ஏப்ரல் 20 முதல் நடக்க இருந்தது. அதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு எப்போது நடைபெறும் என்பதை பின்னர் தெரிவிக்கப்படும்.
ராணி சென்னம்மா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு-
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று ஏப்ரல் 19 இல் நடைபெறுவதாக இருந்த, ராணி சென்னம்மா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் யு.ஜி, பி.ஜி, எம்பிஏ தேர்வுகளை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைத்துள்ளது. அடுத்து எப்போது தேர்வு என்பதை பின்னர் அறிவிக்கப்படும் என்று ராணி சென்னம்மா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பீஜாப்பூர், பெல்காம், விஜயபுரா, பாகல்கோட்டை, மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்களின் தேர்வுகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.